எண்ணெய் விலை இறங்கியது
படம்: AFP
This audio is generated by an AI tool.
அமெரிக்க-ஈரான் சண்டை நிறுத்த அறிவிப்புக்குப் பிறகு எண்ணெய் விலை சரிந்தது.
காலை 8.40 மணி நிலவரப்படி, உலகத் தரநிலையாகக் கருதப்படும் BRENT எண்ணெய் விலை சுமார் 13.6 விழுக்காடு இறங்கி பீப்பாய்க்கு 94 டாலர் 50 காசானது.
அமெரிக்கச் சந்தையில் எண்ணெயின் விலை 14.3 விழுக்காடு வீழ்ச்சிக் கண்டு WTI கச்சா எண்ணெய் பீப்பாய்க்கு 96 டாலர் 80 காசாகப் பதிவானது.
அவற்றின் விலை இதற்குமுன்னர் பீப்பாய்க்கு 100 டாலருக்கும் மேல் இருந்தன.
ஆயினும் எண்ணெய் விலை போருக்கு முந்தைய நிலைக்குத் திரும்ப இப்போதைக்கு வாய்ப்பில்லை என்று ஜப்பான் எரிசக்திப் பொருளாதார நிறுவனத்தைச் சேர்ந்த நிபுணர் கூறுகிறார்.
போருக்கு முந்தைய நிலவரப்படி, ஒரு பீப்பாய் எண்ணெய் விலை 70 டாலர் என்று இருந்தது.