Skip to main content
எண்ணெய் விலை
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

எண்ணெய் விலை - மேலும் 5% உயர்வு

வாசிப்புநேரம் -
எண்ணெய் விலை - மேலும் 5% உயர்வு
(கோப்புப் படம்: Reuters)
வெளியீடு : 04 Mar 2026 09:22AM புதுப்பிப்பு : 04 Mar 2026 11:56AM
மத்திய கிழக்குப் பூசலால் கச்சா எண்ணெய் விலை சுமார் 5 விழுக்காடு உயர்ந்திருக்கிறது. சென்ற ஆண்டு ஜனவரிக்குப் பிறகு அதுவே ஆக அதிக உயர்வு.

அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரானைத் தாக்கி வருவதால் மத்தியக் கிழக்கின் எண்ணெய் ஏற்றுமதி தடைபட்டுள்ளது.

ஈரானின் எதிர்த்தாக்குதலில் கப்பல்களும் எரிசக்தித் தளங்களும் சேதமடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

கத்தார் முதல் ஈராக் வரை எண்ணெய்த் தயாரிப்பு முடங்கியிருக்கிறது.

வரும் தினங்களில் நாளுக்கு 3 மில்லியன் பீப்பாய் வரை எண்ணெய்த் தயாரிப்புக் குறைய வாய்ப்புள்ளதாக ஈராக் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

உலகின் 20 விழுக்காட்டுக் கச்சா எண்ணெய் ஹோர்முஸ் (Hormuz) நீரிணையைத் தாண்டிச் செல்கிறது.

அந்த முக்கிய வர்த்தக நீர்வழியின் பெரும்பகுதி 4ஆவது நாளாக மூடப்பட்டுள்ளது.

தாக்குதல்கள் தொடர்ந்து மோசமடைவதால் டீசல், பெட்ரோல், இயற்கை எரிவாயு, சர்க்கரை, உரங்கள், சோயா எண்ணெய் ஆகியவற்றின் விலையும் உயர்கிறது.


 
ஆதாரம் : Reuters

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்