2 ஆண்டுகளில் காணாத அளவுக்கு எண்ணெய் விலை உயர்ந்தது
மத்திய கிழக்குப் பூசலால் எண்ணெய் விலை 2023ஆம் ஆண்டிலிருந்து காணாத உச்சத்தைத் தொட்டுள்ளது.
Brent கச்சா எண்ணெயின் விலை பீப்பாய்க்கு 92.69 டாலராக இருந்தது. ஒரு வாரத்தில் எண்ணெய் விலை 30 விழுக்காடு உயர்ந்துள்ளது.
கச்சா எண்ணெய் விலைக்கான அனைத்துலகத் தரமாக Brentஇன் விலை கருதப்படுகிறது.
ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் நடத்தும் தாக்குதலுக்குப் பதிலடியாக ஈரான் அண்டை நாடுகளைத் தாக்குகிறது.
மத்திய கிழக்கு நாடுகள் கச்சா எண்ணெய் விநியோகத்துக்கு நம்பியிருக்கும் ஹோர்முஸ் நீரிணையையும் ஈரான் மூடியுள்ளது.
விநியோகத் தொடரில் ஏற்பட்ட சிக்கலால் எண்ணெய் விலைகள் உயர்ந்துள்ளன.
போர் எப்போது நிறைவுக்கு வரும் என்பது தெளிவாகத் தெரியாத காரணத்தால் பதற்றம் கூடியுள்ளது.
ஈரான் நிபந்தனையின்றிச் சரணடைந்தால் மட்டுமே போர் முடிவுக்கு வரும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் மிரட்டல் விடுத்திருக்கிறார்.