எண்ணெய் விலை மீண்டும் ஏறுமுகம்
வாசிப்புநேரம் -
படம்: REUTERS/Alexander Manzyuk
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
எண்ணெய் விலையில் மீண்டும் ஏற்றம் காணப்பட்டுள்ளது.
5 வாரங்கள் காணாத குறைவை நேற்று எட்டியபின், வெளிச்சந்தையில் எண்ணெயின் இருப்பு மிதமிஞ்சியிருக்கக்கூடுமோ என்ற அக்கறை எழுந்தது.
அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் இந்தியப் பொருள்கள் மீதான வர்த்தக வரிகளை அதிகரிக்கப்போவதாக மிரட்டியபின் எண்ணெய் விநியோகக் கட்டமைப்புகள் தடைபடக்கூடும் என்று அஞ்சப்பட்டது.
ரஷ்யாவிடமிருந்து இந்தியா எண்ணெய் வாங்கியதால் அதன்மீது நடவடிக்கை எடுக்கப்போவதாகத் திரு டிரம்ப் மிரட்டியிருந்தார்.
அதையடுத்து எண்ணெய் விலை கணிசமாகச் சரிந்தது.
இன்றைய நிலவரப்படி, பிரெண்ட் (Brent) கச்சா எண்ணெயின் மதிப்பு 0.4 விழுக்காடு கூடி சுமார் 67 டாலராகப் (சுமார் 86 வெள்ளி) பதிவானது.
US West Texas Intermediate கச்சா எண்ணெயின் மதிப்பு அதே 0.4 விழுக்காடு உயர்ந்து சுமார் 65 டாலராகப் (சுமார் 83 வெள்ளி) பதிவானது.

ஆதாரம் : Reuters