Skip to main content
மீண்டும் உயரும் எண்ணெய் விலை
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

மீண்டும் உயரும் எண்ணெய் விலை

வாசிப்புநேரம் -
மீண்டும் உயரும் எண்ணெய் விலை

படம்: REUTERS/Turar Kazangapov

வெளியீடு : 09 Jul 2026 10:17AM புதுப்பிப்பு : 09 Jul 2026 11:15AM
New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

எண்ணெய் விலை மீண்டும் உயர்ந்துள்ளது.

அமெரிக்க ராணுவம் மீண்டும் ஈரானில் தாக்குதல் நடத்துவதை அடுத்து எண்ணெய் விலை பீப்பாய்க்கு ஒரு டாலருக்கு மேல் அதிகரித்தது.

பிரண்ட் கச்சா எண்ணெய் பீப்பாய்க்குச் சுமார் 79 டாலர்.

அமெரிக்கக் கச்சா எண்ணெய் பீப்பாய்க்குச் சுமார் 74 டாலர்.

சுமார் 2 வாரத்தில் பதிவாகியுள்ள ஆக அதிக விலையேற்றம் இதுவே.

ஹோர்முஸ் நீரிணையில் ஈரான் சில கப்பல்களைத் தாக்கியதால் மீண்டும் சண்டை மூண்டது.

ஈரானுடனான சண்டை நிறுத்தம் முடிவுக்கு வந்துவிட்டதாக அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் (Donald Trump) தெரிவித்தார்.

ஆனால் பெரிய அளவிலான போர் நடைபெறாது என்று அவர் சொன்னார்.

அமெரிக்கா ஈரானின் பல பகுதிகளில் தாக்குதல் நடத்தியது.

நேற்றைவிட இன்று தாக்குதல்கள் கடுமையாக இருக்கும் என்றும் எச்சரிக்கப்பட்டது.

பதிலுக்கு பஹ்ரைனிலும் (Bahrain) குவைத்திலும் (Kuwait) உள்ள அமெரிக்க ராணுவத் தளங்களில் ஈரான் தாக்குதல் நடத்தியது.

 
ஆதாரம் : CNA

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்