Skip to main content
எண்ணெய் லாரி மீது மோதிய பேருந்து
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

எண்ணெய் லாரி மீது மோதிய பேருந்து - 16 பேர் பலி

வாசிப்புநேரம் -
எண்ணெய் லாரி மீது மோதிய பேருந்து - 16 பேர் பலி

(படம்: AP)

இந்தோனேசியாவில் பயணிகள் பேருந்து எரிபொருள் லாரி மீது மோதியதில் 16 பேர் மாண்டனர்.

4 பேர் காயமுற்றனர்.

சுமத்ரா தீவின் நெடுஞ்சாலையில் அந்த விபத்து நடந்தது.

பேருந்தில் 20 பேர் இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மதிய வேளையில் அந்தப் பேருந்து எதிர்த் திசையில் சென்றுகொண்டிருந்த எரிபொருள் லாரி மீது மோதியது.

விபத்துக்கு முன்பு பேருந்தில் தீப்பொறிகள் ஏற்பட்டிருக்கலாம் என்று அதிகாரி ஒருவர் கூறினார்.

விபத்து ஏற்படுவதைத் தவிர்ப்பதற்காகப் பேருந்து ஓட்டுநர் வாகனத்தை சாலையின் வலது பக்கம் திருப்பியிருக்கலாம்.

அப்போது எதிரே எண்ணெய் லாரி அதிக வேகத்தில் வந்ததால் விபத்து ஏற்பட்டதாக அந்த அதிகாரி சொன்னார்.

இரு வாகனங்களும் மோதியதில் தீ மூண்டது.

பயணிகள் பலரும் பேருந்துக்குள் சிக்கிக்கொண்டனர்.

மாண்டோரில் பேருந்து ஓட்டுநரும் எண்ணெய் லாரி ஓட்டுநரும் அடங்குவர்.

உயிர்பிழைத்த பேருந்துப் பயணிகள் நால்வர் அருகில் இருந்த மருந்தகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

அவர்களில் மூவருக்குக் கடுமையான தீக்காயங்கள் ஏற்பட்டிருந்தன.
ஆதாரம் : AP

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்