Skip to main content
ஒலிம்பிக் Breakdancing போட்டியில் தங்கம் வென்ற ஜப்பானியர்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

ஒலிம்பிக் Breakdancing போட்டியில் தங்கம் வென்ற ஜப்பானியர்

வாசிப்புநேரம் -
ஜப்பானின் அமி யுவாசா (Ami Yuasa) ஒலிம்பிக் Break நடனப் போட்டியின் முதல் தங்கப் பதக்கத்தை வென்றார்.

அவர் இதற்கு முன்னர் உலக வெற்றியாளர் போட்டியில் இரு முறை தங்கம் வென்றிருக்கிறார்.

"எனது உணர்ச்சிகளை வெளிப்படுத்த Break நடனம் உதவுகிறது. அது ஒரு கலை...விளையாட்டு என்றும் சொல்ல விரும்புகிறேன்," என்றார் அமி.

அமி வென்ற இந்த ஒலிம்பிக் பதக்கத்துக்குத் தனிச் சிறப்புண்டு.

Break நடனம் இவ்வாண்டு பாரிஸில் நடைபெறும் ஒலிம்பிக்கில் முதல் முறையாக அறிமுகமானது.

லித்துவேனியா நடனமணி டாமினிக்கா பெனவிச்சுக்கு (Dominica Banevič) எதிராய்ப் பொருதி 3-0 எனும் புள்ளி வித்தியாசத்தில் அமி தங்கம் வென்றார்.

போட்டியில் சீனாவுக்கு வெண்கலம்.

ஆண்கள் பிரிவின் போட்டிகள் நாளை நடைபெறும்.

ஒலிம்பிக்கில் Break நடனத்தை மீண்டும் காணும் வாய்ப்பு எப்போது கனியும் என்பது கேள்விக்குறிதான்.

2028ஆம் ஆண்டில் லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெறவிருக்கும் அடுத்த ஒலிம்பிக் போட்டிகளில் அந்தப் பிரிவு இருக்காது என்று கூறப்பட்டுள்ளது.
 
ஆதாரம் : Others

மேலும் செய்திகள் கட்டுரைகள்