Skip to main content
லாஸ் ஏஞ்சலிஸ் நகரில் ஒலிம்பிக் கொடி
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

லாஸ் ஏஞ்சலிஸ் நகரில் ஒலிம்பிக் கொடி

வாசிப்புநேரம் -
ஒலிம்பிக் கொடி இப்போது அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலிஸ் (Los Angeles) நகரில் உள்ளது.

அங்குதான் 2028ஆம் ஆண்டு அடுத்த ஒலிம்பிக் நடைபெறுகிறது.

கொடி கொண்டுசெல்லப்பட்ட டெல்ட்டா ஏர்லைன்ஸ் விமானத்தில் அமெரிக்கத் திடல்திட வீரர்களும் அதிகாரிகளும் இருந்தனர்.

விமானத்தின் பக்கவாட்டில் "LA28" என்று வண்ணம் பூசப்பட்டிருந்தது.

கலிபோர்னியா லவ் (California Love) எனும் பாடலுடன் விமானத்துக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

ஒலிம்பிக் போட்டிகளை ஏற்றுநடத்துவது குறித்துப் பெருமையாக இருப்பதோடு பொறுப்பும்
கூடியுள்ளதாக லாஸ் ஏஞ்சலிஸ் மேயர் கரேன் பாஸ் (Karen Bass) சொன்னார்.

2028ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகள் லாஸ் ஏஞ்சலிஸில் நடத்தப்படுவது 2017இல் முடிவானது.

போட்டிகளின்போது நகரின் பல்வேறு பகுதிகளுக்கு இடையே பயணம் செய்வதை எளிதாக்கப் புதிய பேருந்து, ரயில் திட்டங்கள் வகுக்கப்படுகின்றன.

லாஸ் ஏஞ்சலிஸ் நகரம் இதற்கு முன்னர் 1932, 1984ஆம் ஆண்டுகளில் ஒலிம்பிக் போட்டிகளை ஏற்று நடத்தியுள்ளது.
ஆதாரம் : AGENCIES

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்