Skip to main content
ஒலிம்பிக் பெண்கள் நெடுந்தொலைவு நீச்சல்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

ஒலிம்பிக் பெண்கள் நெடுந்தொலைவு நீச்சல் - திட்டமிட்டபடி இன்று நடைபெறும்

வாசிப்புநேரம் -
ஒலிம்பிக் பெண்கள் நெடுந்தொலைவு நீச்சல் - திட்டமிட்டபடி இன்று நடைபெறும்

(கோப்புப் படம்: Maja Hitij/Pool via REUTERS)

பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளில் பெண்கள் 10 கிலோமீட்டர் நெடுந்தொலைவு நீச்சல் திட்டமிட்டதைப்போல் செய்ன் ஆற்றில் இன்று நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

ஆற்று நீர் தரநிலைகளுக்கு உட்பட்டு இருப்பதாக ஏற்பாட்டாளர்கள் கூறினர்.

இன்றும் நாளையும் ஆற்றில் இரு நீச்சல் போட்டிகள் நடைபெறவிருக்கின்றன.

அதற்கான பயிற்சி நிகழ்ச்சி தண்ணீர் தூய்மைக்கேட்டால் முன்னதாக ரத்துச் செய்யப்பட்டிருந்தது.

நகரின் வடிகால் முறைகளை மேம்படுத்த பிரெஞ்சு அதிகாரிகள் 1.5 பில்லியன் டாலர் செலவு செய்திருக்கின்றனர்.

அடுத்த கோடைக்காலத்திற்குள் குடியிருப்பாளர்கள் நீந்துவதற்கு ஏதுவாக ஆறு சுத்தமாகிவிடும் என்று அதிகாரிகள் உறுதிகூறினர்.
ஆதாரம் : Reuters

மேலும் செய்திகள் கட்டுரைகள்