Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

'ஓமக்ரானைக் குறிவைக்கும் தனி தடுப்புமருந்து அவசியம்!'

வாசிப்புநேரம் -
'ஓமக்ரானைக் குறிவைக்கும் தனி தடுப்புமருந்து அவசியம்!'

படம்: AFP

ஓமக்ரான் ரகக் கிருமியைக் குறிவைக்கும் சிறப்புத் தடுப்பூசி உருவாக்கப்படுவது அவசியம் என்று மருத்துவ நிபுணர்கள் குறியுள்ளனர்.

அமெரிக்காவின் உணவு, மருந்து நிர்வாகத்தின் நிபுணர் குழு நடத்திய ஆய்வில் அது பரிந்துரைக்கப்பட்டது.

சளிக்காய்ச்சல் கிருமியை விட கொரோனா கிருமி அதிக வேகத்தில் உருமாற்றம் பெறும் நிலையில், வருங்காலத்தில் அது எவ்வாறு இருக்கும் என முன்னுரைக்கப்படுவது அவசியம்.

அப்போது தான் அதற்கு ஏற்றவகையில் தடுப்புமருந்தை உருவாக்கமுடியும்.

ஆல்ஃபா, டெல்ட்டா ஆகிய ரகங்கள் தற்போது பரவலாகத் தென்படுவதில்லை. 

உலகெங்கும் ஓமக்ரானும் அதன் துணைரகங்களும் இவ்வாண்டு முழுதும் ஆதிக்கம் செலுத்தியுள்ளன.

எனவே, கொரோனா கிருமி, ஓமக்ரான் ரகத்தின் வழியாகவே வருங்காலத்தில் உருமாற்றம் பெறும் என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.

இந்நிலையில், ஓமக்ரானையும் அதன் துணைரகங்களையும் குறிவைக்கும் சிறப்புத் தடுப்புமருந்தை உருவாக்க வேண்டும் என்று பல நிபுணர்கள் கருதுகின்றனர். 

அத்துடன், புதிய தடுப்புமருந்து ஓமக்ரானுக்கும் தொடக்கக்கட்ட கொரோனா கிருமிக்கும் எதிராகச் செயல்படும் வகையில் இருக்க வேண்டும் என்று பெரும்பாலான நிபுணர்கள் கூறினர்.

அதன்வழி, உடலின் தடுப்பாற்றலை விரிவுபடுத்தமுடியும் என்று கூறப்பட்டது.

-AFP

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்