பிரான்சில் பாதசாரிகள் மீது காரை ஏற்றிய ஆடவர் கைது - ஒருவர் மரணம், 10 பேர் காயம்
வாசிப்புநேரம் -
படம்: AFP/Matthieu Clavel
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
பிரான்சில் சாலையில் சென்றுகொண்டிருந்த பாதசாரிகள் மீது காரை மோதிய ஆடவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
சம்பவத்தில் ஒருவர் மாண்டார்; 10 பேர் காயமுற்றதாக AFP ஊடகம் கூறுகிறது. அவர்களில் 7 பேரின் நிலை கவலைக்கிடமாக இருக்கிறது.
பாதிக்கப்பட்ட அனைவரும் 17 வயதுக்கும் 40 வயதுக்கும் இடைப்பட்ட ஆண்கள் எனத் தெரிகிறது.
ரயில் நிலையத்துக்கு எதிரே உள்ள சாலையில் ஆடவர் வேண்டுமென்றே பாதசாரிகள் மீது காரை மோதியது தெரியவந்துள்ளது.
கைகலப்புக்குப் பிறகு இந்தச் சம்பவம் நடந்திருக்கலாம் என்று காவல்துறை வட்டாரம் தெரிவித்தது.
சந்தேக நபர் 26 வயது ஆடவர். அவர் ரஷ்யாவில் பிறந்தவர்.
அவர் மீது சில போக்குவரத்துக் குற்றங்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது. அதனால் முன்னதாகவே அவரைப் பற்றிக் காவல்துறைக்குத் தெரியும் என்று அதிகாரிகள் கூறினர்.
சம்பவத்துக்குப் பிறகு அவர் அங்கிருந்து தப்பிச் சென்றார்.
பின்னர் சுமார் 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பகுதியில் அவர் கைதுசெய்யப்பட்டார்.
கொலை, மோசமான தாக்குதல் ஆகிய குற்றச்சாட்டுகளின்கீழ் காவல்துறை விசாரணையைத் தொடங்கியுள்ளது.
தற்போதைய நிலையில் இது பயங்கரவாத நோக்கத்துடன் நடத்தப்பட்டதாகத் தெரியவில்லை.
எனினும், விசாரணை இப்போதுதான் தொடங்கியுள்ளதாக அரசுத் தரப்பு தெரிவித்துள்ளது.

ஆதாரம் : AFP