காற்பந்தில் 'சம்பவம்' - 47 பேர் காயம்
Connie FRANCE / AFP
This audio is generated by an AI tool.
பெரு தலைநகர் லிமாவின் காற்பந்து அரங்கில் நிகழ்ந்த சம்பவத்தில் 47 பேர் காயமடைந்தனர். மேலும் 39 பேர் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர்.
அவர்களில் மூவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
ஒருவர் மாண்டார்.
என்ன நடந்தது என்று தெரியவில்லை. சம்பவம் என்றே கூறப்படுகிறது.
லிமாவைச் சேர்ந்த இரு குழுக்களுக்கு இடையிலான காற்பந்தாட்ட போட்டி அரங்கில் நடைபெறவிருந்தது.
அதைக் காண நூற்றுக்கணக்கான ரசிகர்கள் அரங்கில் கூடியிருந்தனர்.
அரங்கிலிருந்த சுவர் இடிந்து விழுந்ததில் விபத்து நேர்ந்ததாய் முன்னதாகத் தகவல்கள் வெளியாகியிருந்தன.
ஆனால் விபத்துக்கு அது காரணமில்லை என்று பின்னர் தெளிவுப்படுத்தப்பட்டது.
விபத்து குறித்து அதிக விவரங்கள் பகிர்ந்துகொள்ளப்படவில்லை.
என்றாலும் அரங்கம் நல்ல நிலையில் இருப்பதாகக் கூறப்பட்டது.
நிகழவேண்டிய போட்டிகள் திட்டமிட்டப்படி நடந்தேறும் என்றும் அறிவிக்கப்பட்டது.