குப்பையைக் கிளறித் தேடி மீட்கப்பட்ட €1 மில்லியன் பரிசுச் சீட்டு
வாசிப்புநேரம் -
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
இத்தாலியில் துப்புரவாளர்கள் சிலர் குப்பை மேட்டை அலசி அலசித் தேடினர்...
இறுதியில் கிடைத்து ஒரு பரிசுச் சீட்டு..
அதன் மதிப்பு ஒரு மில்லியன் யூரோ (சுமார் 1.5 மில்லியன் வெள்ளி).
அதிர்ஷ்டக் குலுக்கில் முதல் பரிசை வென்ற பெண்ணின் பரிசுச் சீட்டு தவறுதலாய்க் குப்பைக்குச் சென்றது.
அதை அறிந்த பெண் மனம் தளரவில்லை.
பரிசுச் சீட்டைத் தேடியெடுக்கக் கழிவு மேலாண்மை நிறுவனத்தின் உதவியைக் கேட்டார்.
பெண் எங்கிருந்து அழைத்தார் என்பதை வைத்து வட்டாரக் குப்பை லாரியை நிறுவனம் அடையாளம் கண்டது.
லாரி ஊழியர்களைக் குப்பை அலசிப் பார்க்குமாறு அது கூறியது.
ஊழியர்களின் தேடலில் நல்ல பலன் கிட்டியது.
பரிசுச் சீட்டு அப்படியே கிழியாமல் இருந்தது.
செய்தியை அறிந்த பெண்ணுக்கு ஆனந்தக் கண்ணீர்.
பரிசுச் சீட்டைத் தேடிக் கொடுத்ததற்கு உரிய வெகுமதி அளிக்கப்படும் என்றார் புதிய கோடீஸ்வரர்.

ஆதாரம் : AFP