Skip to main content
சண்டை நிறுத்தம் அமைதியைத் தரவில்லை
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

சண்டை நிறுத்தம் அமைதியைத் தரவில்லை- காஸா மக்கள்

வாசிப்புநேரம் -
சண்டை நிறுத்தம் அமைதியைத் தரவில்லை- காஸா மக்கள்

படம்: AP Photo/Jehad Alshrafi

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

காஸா வட்டாரத்தில் அமெரிக்கா தலைமையிலான போர் நிறுத்தம் நடப்புக்கு வந்து ஓராண்டாகிவிட்டது.

ஆனால், இடம்பெயர்ந்தோர் முகாம்களில் வசிப்பவர்கள் கிட்டத்தட்ட ஒவ்வொரு நாளும் இஸ்ரேலிய ஆகாயவழித் தாக்குதல்களை எதிர்கொள்கின்றனர்.

நினைத்ததுபோல் போர் நிறுத்தம் அமைதியைத் கொண்டுவரவில்லை என்கிறார்கள் காஸா மக்கள்.

இஸ்ரேல் தாக்குதல்களின் தீவிரத்தைக் குறைத்துள்ளது.

ஆனால் அவை தொடர்கின்றன; காஸாவின் சுமார் 70 விழுக்காடு இன்னும் இஸ்ரேலின் பிடியில் இருக்கிறது.

அந்தப் பாலஸ்தீன பகுதிக்கான மறுசீரமைப்புப் பணிகளிலும் இழுபறி தொடர்கிறது.

எந்தவொரு மாற்றமும் இல்லை; நிலைமை முன்பைவிட இன்னும் மோசமாக இருப்பதாய்ச் சொல்கிறார் காஸாவில் வசிக்கும் ஃபாத்திமா அவ்கல் (Fatimah Awkal).

தலைக்கு மேலே இடைவிடாமல் ஒலிக்கும் வானூர்திகளின் ரீங்காரத்தால், ஒரு கணம்கூட நிம்மதி இல்லை என்கிறார் அவர்.

வேறு சிலரோ சண்டை நிறுத்தம் நடப்பிற்கு வந்தவுடன் வீடு திரும்பலாம் எனும் நம்பிக்கையில் இருந்தனர்.

அது இன்னும் நிறைவேறாத ஆசையாகவே இருக்கிறது பலருக்கு.

பலர் இன்னும் தற்காலிக முகாம்களில்தான் வசிக்கிறார்கள்.

அதோடு காஸாவுக்குள் செல்லக்கூடிய அனைத்து நுழைவாயில்களும் இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் இருக்கின்றன.

இஸ்ரேல் தொடர்ந்து குறைந்த அளவிலான உதவிகளை மட்டுமே அந்தப் பகுதிக்குள் அனுமதிக்கிறது.
 
ஆதாரம் : AFP

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்