Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம் செய்தியில் மட்டும்

இணையத்தில் நிதி திரட்டும் போக்கு - எப்படி நம்பிப் பணம் அளிப்பது?

வாசிப்புநேரம் -


வெள்ளம், நிலநடுக்கம், போர்...

இதுபோன்ற பேரிடர்கள் உலகின் எந்த மூலையில் நடந்தாலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ உடனே பல நிதித் திரட்டு நடவடிக்கைகள் தொடங்கப்படுகின்றன.

எந்த நாட்டில் இருந்தாலும் இணையம் வழி மக்கள் அத்தகைய நிதித் திரட்டு நடவடிக்கைகளுக்கு நன்கொடை அளிக்கலாம்.

ஆனால் அத்தகைய இணைய நிதித் திரட்டு நடவடிக்கைகளின் நம்பகத்தன்மையை எப்படி உறுதி செய்வது?

கலாசார, சமூக, இளையர்துறை அமைச்சைத் தொடர்புகொண்டது 'செய்தி'...

சிங்கப்பூரில் நடத்தப்படும் அனைத்து நிதித் திரட்டு நடவடிக்கைகளும் இணைய-வழி உட்பட, அறநிறுவன ஆணையாளரால் (COC) நிர்வகிக்கப்படுவதாக அமைச்சு சொன்னது.

அதன் கட்டுப்பாடுகளின் கீழ் நிதி திரட்டலின் நோக்கம், அதன் மூலம் பயன் அடைபவர்கள் யார்யார், எவ்வளவு நிதி கிடைத்தது, அது எவ்வாறு செலவு செய்யப்பட்டது ஆகிய விவரங்கள் அளிக்கப்பட வேண்டும் என்று அது சொன்னது.

வெளிநாட்டு நிதி திரட்டல்களும் அவற்றில் அடங்குமா?

வெளிநாடுகளில் நடந்த பேரிடர்களுக்கோ சம்பவங்களுக்கோ சிங்கப்பூரில் நிதி திரட்ட வேண்டுமென்றால் Fund-Raising for Foreign Charitable Purposes (FRFCP) என்ற அனுமதியை COC-யிடமிருந்து பெறவேண்டும் என்றது அமைச்சு.

அதன் மூலம் நன்கொடைகள் முறையாகப் பயன்படுத்தப்படுகின்றனவா என்பது உறுதி செய்யப்படுகின்றது.

குறிப்பிட்ட நிதித் திரட்டுக்கு அனுமதி அளிக்கப்பட்டிருக்கின்றதா என்பதைப் பொதுமக்கள் www.charities.gov.sg என்ற தளத்தில் உறுதிசெய்துகொள்ளலாம்.

சந்தேகத்திற்குரிய நிதித் திரட்டு நடவடிக்கைகள் குறித்து பொதுமக்கள் COC-யிடம் புகார் அளிக்கலாம்.

மோசடியாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தால் காவல்துறையிடம் உடனடியாகப் புகார் செய்யலாம்.

சிங்கப்பூரின் கட்டுப்பாடுகளுக்கு இணங்கச் செயல்படும் சில நிதித் திரட்டு இணையதளங்கள்...

-Give.asia
-Giving.sg
-Ray of Hope
-SimplyGiving
-DeeDa

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்