90 ஆண்டுகள் தீராத கணக்கை 88 மணி நேரத்தில் முடித்த AI
வாசிப்புநேரம் -
படம்: Envato Elements
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
பல ஆண்டுகளாகத் தீர்க்கப்படாத கடினமான கணிதச் சிக்கலில் முன்னேற்றம் கண்டுள்ளதாக ஓப்பன்ஏஐ (OpenAI) தெரிவித்துள்ளது.
சுமார் 10,000 செயற்கை நுண்ணறிவு (AI) முகவர்களைப் பயன்படுத்தி 88 மணி நேரத்தில் தீர்வு கண்டதாக நிறுவனம் கூறியது.
திரவங்களின் இயக்கம் தொடர்பான நேவியர்-ஸ்டோக்ஸ் (Navier-Stokes) சமன்பாடுகளில் உள்ள சிக்கல் அது.
அதன் முக்கிய அம்சங்களுக்குச் சுமார் 90 ஆண்டுகளாகக் கணித ஆதாரம் கிடைக்கவில்லை.
OpenAI-யின் தீர்வு இன்னும் சுயேச்சையாகச் சரிபார்க்கப்படவில்லை.
மில்லேனியம் பரிசை வழங்கும் கிளே கணிதக் கழகமும் (Clay Mathematics Institute) அதை ஏற்கவில்லை.
தற்போதைய தீர்வு பரிசுக்குத் தேவையான நான்கு அம்சங்களில் இரண்டை மட்டுமே நிறைவேற்றுகிறது.
1 மில்லியன் அமெரிக்க டாலர் பரிசைக் கோரப்போவதில்லை என்று OpenAI கூறியது.
மற்ற கணிதவியலாளர்களின் பணியை அறிந்த பின்னரே OpenAI ஆய்வைத் தொடங்கியதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அதனை நிறுவனம் மறுத்துள்ளது.

ஆதாரம் : Others/BBC