"ஹமாஸின் முடிவு எதிர்பாராத் திருப்பம்"
வாசிப்புநேரம் -
படம்: Reuters
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
காஸா உடன்பாட்டில் பிணையாளிகளை விடுவிக்கத் தயாராக இருப்பதாய் ஹமாஸ் சொன்னது எதிர்பாராத் திருப்பம் என்கிறார் அரசியல் கவனிப்பாளர் திரு காளிச்சரன் வீரசிங்கம்.
அண்மையில் அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் காஸா அமைதி ஒப்பந்தத்தை முன்மொழிந்தார்.
அது இஸ்ரேல் - ஹமாஸ் போர் நிறுத்தத்திற்கு வழி வகுக்குமா என்ற கேள்வி நீடிக்கிறது.
ஒப்பந்தத்தில் பல அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.
அவற்றில் பிணையாளிகளை விடுவிக்கவேண்டும் என்பதை ஹமாஸ் ஏற்றுக்கொண்டது.
“இருதரப்பு இடையே நம்பிக்கையின்மை நிலவும் வேளையில் இது நம்பிக்கையூட்டும் முக்கிய நடவடிக்கை”
என்று திரு காளிச்சரன் 'செய்தி'யிடம் கூறினார்.
எனினும் இஸ்ரேலின் பாதுகாப்பு உத்தரவாதம், காஸாவின் எதிர்கால ஆட்சி, ஹமாஸின் ஆயுதக் களைவு ஆகிய பெரும் சிக்கல்கள் தொடர்கின்றன.
ஹமாஸின் முடிவு விரிவான பேச்சுவார்த்தைக்கு வாய்ப்பளிக்கும் என்றாலும் அது அனைத்துச் சிக்கல்களுக்கும் தீர்வாகாது
என்கிறார் திரு காளிச்சரன்.

ஆதாரம் : Mediacorp Seithi