Skip to main content

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

தொலைக்காட்சிப் பிரபலம் Oprah Winfrey ஹவாயியில் அவசர வெளியேற்றத்துக்கான சாலையை மூடினாரா?

வாசிப்புநேரம் -
New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

அமெரிக்கத் தொலைக்காட்சிப் பிரபலமும் பெருஞ்செல்வந்தருமான ஓப்ரா வின்ஃப்ரி (Oprah Winfrey) ஹவாயியில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டபோது அவரது வீட்டை ஒட்டியுள்ள தனியார் சாலையை மூடியதாகக் கூறப்படுகிறது.

அதனால் மக்கள் விரைவாகப் பாதுகாப்பான பகுதிகளுக்குச் செல்ல முடியவில்லை என்று குற்றஞ்சாட்டப்பட்டது.

திருவாட்டி வின்ஃப்ரி அதை மறுத்திருக்கிறார்.

அவர் ஹவாயியின் மாவி (Maui) தீவில் வீடு வைத்திருக்கிறார். அந்த வீட்டுக்கு அருகிலுள்ள சாலை அவருடைய சொத்தில் அடங்கும்.

நேற்று சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்ட பின் மக்கள் அவசரமாக வெளியேறினர். அதில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. நெரிசல் ஏற்பட்ட பிறகும் அவர் சாலையை மக்களுக்குத் திறக்கவில்லை என்று பலர் சமூக ஊடகங்களில் கூறினர்.

அதிகாரிகள் அந்தச் சாலையை அவசர வெளியேற்றத்துக்குப் பயன்படுத்தலாம் என்று கூறிய பிறகும் அது திறக்கப்படவில்லை என்று மக்கள் கூறினார்.

ஆனால் இந்தக் கூற்றுகளைத் திருவாட்டி வின்ஃப்ரி முற்றிலும் மறுப்பதாக அவருடைய பேச்சாளர் கூறினார்.

திருவாட்டி வின்ஃப்ரி சாலையைத் திறந்து வைத்ததாகவும், அவர் காவல்துறையுடன் ஒத்துழைத்து மக்கள் வெளியேற உதவியதாகவும் பேச்சாளர் கூறினார்.
ஆதாரம் : AFP

மேலும் செய்திகள் கட்டுரைகள்