உலகம் trending
எகிப்து வீதிகளில் வளைந்து நெளிந்து ஓடிய நெருப்புக்கோழி
வாசிப்புநேரம் -
காணொளியிலிருந்து எடுப்பட்ட காட்சி: Instagram/karem_hisham_amer
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
எகிப்தின் (Egypt) அலெக்சாண்டிரியா (Alexandria) நகரத்தில் நெருப்புக்கோழி ஒன்று வீதியில் தலை தெறிக்க ஓடுவதைக் காட்டும் காணொளி சமூக ஊடகத்தில் பரவி வருகிறது.
காணொளியில் நெருப்புக்கோழிக்குப் பின்னால் ஒரு சிறுவன் வேகமாக ஓடி அதைத் துரத்துவதைப் பார்க்க முடிகிறது.
சிறுவன் எவ்வளவு வேகமாக ஓடியும் பறவையின் வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியவில்லை.
நெருப்புக்கோழி வாகனங்களில் மோதாமல் வளைந்து நெளிந்து சென்றது.
இன்னொரு சிறுவன் கட்டையை குறுக்கில் விட்டு பறவையைத் தடுக்கிவிழச் செய்யப் பார்த்தான்.
ஆனால் நெருப்புக்கோழி சாமர்த்தியமாக கட்டையின் மேல் குதித்து தொடர்ந்து ஓட்டம் பிடித்தது.
காணொளியைக் கண்ட இணையவாசிகள் வேடிக்கையாகக் கருத்துகளைப் பதிவிட்டனர்.
ஏதோ தினமும் நிகழும் சம்பவம் போல இருக்கிறது… மக்கள் பதறவில்லை என்று ஒருவர் சொன்னார்.
சம்பவம் கடந்த மாதம் (மே) 29ஆம் தேதி நடந்தது.

ஆதாரம் : Mediacorp Seithi