உலகம் trending
நெருப்புக்கோழியின் மின்னல் ஓட்டம் - நெடுஞ்சாலையில் வாகனங்கள் தடுமாற்றம்
படம்: AFP
This audio is generated by an AI tool.
தாய்லந்து கரையோர நெடுஞ்சாலையில் ஒரு நெருப்புக்கோழி ஓடித் திரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஆறு மாத ஆண் நெருப்புக்கோழி சாலையின் மூன்று தடங்களில் ஓட்டம் பிடித்தது. கார்களும் லாரிகளும் தட்டுத் தடுமாறின.
செரட் (Chairat) எனும் மோட்டார்சைக்கிள் ஓட்டுநர் அந்தக் காட்சியைப் படம்பிடித்து இணையத்தில் வெளியிட்டார்.
சம்பவம் நேற்று நடந்தது.
செரட் வீட்டுக்குச் சென்றுகொண்டிருந்தபோது சாலை நெரிசலில் சிக்கினார்.
முதலில் அங்கு விபத்து ஏற்பட்டதாக அவர் நினைத்தார்.
சற்று முன்னோக்கிச் சென்ற பிறகே செரட் நெருப்புக்கோழியைப் பார்த்தார்.
நெருப்புக்கோழியின் பெயர் B1.
அது ஒரு காப்பிக் கடையிலிருந்து (Cafe) தப்பிச் சென்றதாகத் தெரிகிறது.
ஆடவர் ஒருவர் நெருப்புக்கோழியைப் பிடித்து அதை உரிமையாளரிடம் ஒப்படைத்ததாகச் சொல்லப்பட்டது.
உரிமையாளர் 15,000 பாட் (சுமார் 600 வெள்ளி) செலவிட்டு இரண்டு நெருப்புக்கோழிகளை வாங்கியதாகக் கூறினார்.
கடையில் விநியோக லாரி ஏற்படுத்திய சத்தத்தைக் கேட்டு நெருப்புக்கோழி பயந்து தப்பிச் சென்றதாக அவர் குறிப்பிட்டார்.
அது போன்ற சம்பவத்தைத் தடுக்க இனி கூடுதல் கவனத்தோடு நெருப்புக்கோழியைப் பார்த்துக் கொள்ளவிருப்பதாக உரிமையாளர் சொன்னார்.
நெருப்புக்கோழி உலகிலேயே ஆக வேகமாக ஓடக்கூடிய பறவை. அது மணிக்கு 70 கிலோமீட்டர் வரை ஓடும் ஆற்றலைப் படைத்தது.