Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

கனடியத் தலைநகரில் COVID-19 விதிமுறைகளை எதிர்த்து நூற்றுக்கணக்கான கனரக வாகனங்கள் அணிவகுப்பு

வாசிப்புநேரம் -

கனடியத் தலைநகரில் COVID-19 தடுப்பூசி போட்டுக்கொள்வது கட்டாயமாக்கப்படுவதற்கும் கிருமிப்பரவல் கட்டுப்பாடுகளுக்கும் எதிர்ப்புத் தெரிவித்து நூற்றுக்கணக்கான கனரக வாகனங்கள் அணிவகுத்துள்ளன. 

இந்த மாத நடுப்பகுதியில் கனடாவும், அமெரிக்காவும் கனரக வாகன ஓட்டுநர்கள் தடுப்பூசி போட்டுக் கொள்வதைக் கட்டாயமாக்கின. 

அதற்கு எதிராக "சுதந்திரமான வாகன அணி" எனும் பெயரில் போராட்டம் தொடங்கியது.  பிறகு அது அரசாங்கத்தின் அத்துமீறலுக்கு எதிரான ஆர்ப்பாட்டமாக மாறியது. 

உலகின் ஆக நீளமான எல்லையைக் கடக்கும் வாகனமோட்டிகள் அதனால் பாதிக்கப்பட்டனர். 

போராட்டத்தைக் கட்டுக்குள் கொண்டுவரத் தேவையான நடவடிக்கைகளை எடுக்கவிருப்பதாக ஒட்டாவா (Ottawa) காவல்துறைச் சேவை தெரிவித்துள்ளது. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்