இரு சகோதரர்கள்... வெவ்வேறு நாடுகளைப் பிரதிநிதிக்கின்றனர்...
வாசிப்புநேரம் -
(படங்கள்: Facebook/Rangers FC, Facebook/Leicester City Football Club)
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
ஜான் சௌட்டார் (John Souttar), ஹாரி சௌட்டார் (Harry Souttar)...
இரு சகோதரர்களும் உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியில் பங்கெடுக்கின்றனர்.
ஆனால் ஜான் ஸ்காட்லந்தைப் பிரதிநிதிக்கிறார்.
ஹாரியோ ஆஸ்திரேலியாவைப் பிரதிநிதிக்கிறார்.
அது குறித்து அவர்களுடைய பெற்றோர் BBC ஊடகத்துக்குப் பேட்டி அளித்தனர்.
இருவரும் உலகக் கிண்ணப் போட்டியில் கலந்துகொள்வது பெருமை அளிப்பதாக அவர்கள் கூறினர்.
தந்தை ஜாக் சௌட்டார் (Jack Souttar) ஸ்காட்லந்தைச் சேர்ந்தவர். தாய் ஹெதர் சௌட்டாரின் (Heather Souttar) பூர்விகம் ஆஸ்திரேலியா என்பதால் ஹாரியால் ஆஸ்திரேலிய அணியில் சேர முடிந்தது.
2018ஆம் ஆண்டிலிருந்து ஜான் ஸ்காட்லந்து அணியில் விளையாடி வருகிறார். இவ்வாண்டுக்கு முன்னர் கடைசியாக ஸ்காட்லந்து 1998ஆம் ஆண்டு உலகக் கிண்ணப் போட்டிக்குத் தகுதிபெற்றது. அதனால் ஜான் இவ்வாண்டுதான் முதன்முறையாக உலகக் கிண்ணத்தில் கலந்துகொள்கிறார்.
2019ஆம் ஆண்டில் ஹாரி ஆஸ்திரேலிய அணியில் சேர்ந்தார். அவர் 2022ஆம் ஆண்டு கத்தாரில் நடந்த உலகக் கிண்ணப் போட்டியில் பங்கெடுத்தார்.
இரு நாட்டு அணிகளுக்கும் ஆதரவாய் இருப்பதாகப் பெற்றோர் கூறுகின்றனர். சகோதரர்களை ஆதரிக்க 4 தலைமுறைகளைச் சேர்ந்த குடும்பத்தினர் போட்டிகளை நேரில் காணச் செல்வதாகத் தாயார் ஹெதர் சொன்னார்.
ஆஸ்திரேலியாவும் ஸ்காட்லந்தும் மோத நேர்ந்தால்?
இருவருக்கும் ஆதரவளிப்போம் என்று தந்தை ஜாக் பெருமையுடன் தெரிவித்தார்.

ஆதாரம் : Others