Skip to main content
2025 FIFA சிறந்த விளையாட்டாளர்கள்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

2025 FIFA சிறந்த விளையாட்டாளர்கள் - உஸ்மான் டெம்பேலி, ஐட்டானா போன்மட்டி

வாசிப்புநேரம் -
2025 FIFA சிறந்த விளையாட்டாளர்கள் - உஸ்மான் டெம்பேலி, ஐட்டானா போன்மட்டி
(படம்: Reuters/Benoit Tessier, Reuters/Susana Vera)
பாரிஸ் செயிண்ட் ஜெர்மன் (Paris St Germain) காற்பந்துக் குழு, பிரஞ்சுத் தேசியக் காற்பந்துக் குழு ஆகியவற்றின் முன்னிலை ஆட்டக்காரர் உஸ்மான் டெம்பேலிக்கு (Ousmane Dembele) FIFA சிறந்த ஆண் விளையாட்டாளர் விருது வழங்கப்பட்டுள்ளது.

28 வயது டெம்பேலி முன்னதாகச் செப்டம்பரில் இவ்வாண்டின் மிகச் சிறந்த ஆண் விளையாட்டாளருக்கான Ballon d'Or விருதைத் தட்டிச்சென்றார்.

கடந்த பருவத்தில் அவர் அனைத்துப் போட்டிகளிலும் மொத்தம் 35 கோல்களைப் புகுத்தினார்.

ஐரோப்பிய முன்னணிக் காற்பந்துப் போட்டிகளில் ஒன்றான Champions Leagueஐ முதன்முறையாகப் பாரிஸ் செயிண்ட் ஜெர்மன் காற்பந்துக் குழு இவ்வாண்டு வென்றது. அதற்கு டெம்பேலி முக்கிய காரணமாகத் திகழ்ந்தார்.

பெண்கள் பிரிவில், 27 வயது ஐட்டானா போன்மட்டி (Aitana Bonmati) மூன்றாவது முறையாக FIFA சிறந்த விளையாட்டாளர் விருதைக் கைப்பற்றினார்.

அவரும் இவ்வாண்டின் Ballon d'Or விருதைத் தொடர்ந்து மூன்றாவது முறையாகப் பெற்றார்.

இந்தப் பருவத்தின் மகளிர் Champions Leagueஇன் சிறந்த விளையாட்டாளர் என்ற பெருமையும் போன்மட்டியைச் சேர்கிறது.
 
ஆதாரம் : Reuters

மேலும் செய்திகள் கட்டுரைகள்