Skip to main content

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

சிறைத் தண்டனைக்கும் அஞ்சப்போவதில்லை: பங்களாதேஷின் முன்னைய பிரதமர்

வாசிப்புநேரம் -
சிறைத் தண்டனைக்கும் அஞ்சப்போவதில்லை: பங்களாதேஷின் முன்னைய பிரதமர்

படம்: REUTERS/Mohammad Ponir Hossain

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

பங்களாதேஷின் முன்னைய பிரதமர் ஷேக் ஹசினா (Sheikh Hasina) டிசம்பர் மாதம் நாடு திரும்பப்போவதாக அறிவித்திருக்கிறார்.

அவரது ஆட்சி முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட இரண்டாம் ஆண்டு நிறைவில் அவர் பேசினார்.

திருவாட்டி ஹசினா இந்தியாவில் இருக்கிறார்.

நாடு திரும்பினால் சிறையில் அடைக்கப்படலாம், பொய்யான வழக்குகளில் விதிக்கப்பட்ட தண்டனை நிறைவேற்றப்படலாம், ஆனாலும் அதற்காக அஞ்சப்போவதில்லை என்று அவர் சொன்னார்.

தமது அவாமி லீக் கட்சி மீது விதிக்கப்பட்ட தடை நீக்கப்படவேண்டும் என்றும் புதிய அரசாங்கத்தை எதிர்த்துப் போராடப் போவதாகவும் திருவாட்டி ஹசினா கூறினார்.

அவர் காணொளியில் பேசுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது ஆனால் குரல் பதிவு மட்டுமே வெளியிடப்பட்டது.
ஆதாரம் : Others

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்