Skip to main content
இந்தோனேசியா: பள்ளிகளில் நச்சுணவுச் சம்பவம்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

இந்தோனேசியா: பள்ளிகளில் நச்சுணவுச் சம்பவம் - 1000க்கும் அதிகமான பிள்ளைகளுக்குப் பாதிப்பு

வாசிப்புநேரம் -
இந்தோனேசியா: பள்ளிகளில் நச்சுணவுச் சம்பவம் - 1000க்கும் அதிகமான பிள்ளைகளுக்குப் பாதிப்பு

படம்: AFP

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

இந்தோனேசியா பள்ளிகளில் நடந்த நச்சுணவுச் சம்பவத்தால் 1000க்கும் மேற்பட்ட பிள்ளைகள் அவதிப்படுகின்றனர்.

மேற்கு ஜாவா (West Java) மாநிலத்தின் 4 பகுதிகளில் பள்ளிகளில் வழங்கப்பட்ட உணவை உட்கொண்ட பிள்ளைகள் நோய்வாய்ப்பட்டனர்.

இந்தோனேசிய அரசாங்கம் பல பில்லியன் டாலர் செலவில் இலவச உணவுத் திட்டத்தை ஜனவரி மாதம் அறிமுகம் செய்தது.

இந்தச் சம்பவத்திற்குமுன் குறைந்தது 6,452 பிள்ளைகள் பாதிக்கப்பட்டதாகச் சொல்லப்பட்டது.

திட்டத்தின் தரம், கவனக்குறைவு ஆகியவை குறித்துக் கேள்விகள் எழுகின்றன.

சுகாதாரச் சிக்கல்கள் எழுவதால் அரசாங்கச் சார்பற்ற அமைப்புகள் திட்டத்தைத் தற்காலிகமாக நிறுத்துமாறு கேட்டுக்கொண்டனர்.

மேற்கு பாண்டுங்கில் (West Bandung) சுகாதார அவசரநிலை அறிவிக்கப்பட்டதாவும் நச்சுணவுச் சம்பவத்தைக் கையாள நிதி ஒதுக்கப்பட்டதாகவும் ஆளுநர் கூறினார்.
ஆதாரம் : Reuters

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்