Skip to main content
ஜொகூரில் வெள்ளம்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

ஜொகூரில் வெள்ளம் - 1,500க்கும் அதிகமானோர் பாதிப்பு

வாசிப்புநேரம் -
மலேசியாவின் ஜொகூர் மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் 1,500க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மழை தொடர்வதால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை இன்னும் உயரலாம் என்று கணிக்கப்படுகிறது.

இன்று மாலை 4 மணி வரை, 489 குடும்பங்களைச் சேர்ந்த 1,597 பேர் 24 தற்காலிகத் துயர்துடைப்பு மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மாநிலப் பேரிடர் நிர்வாகக் குழு அத்தகவலை வெளியிட்டது.

கோத்தா திங்கி (Kota Tinggi), குளுவாங் (Kluang), கூலாய் (Kulai), பொந்தியான் (Pontian)ஆகிய மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக The Star செய்தி கூறுகிறது.

இதில் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட மாவட்டம் கோத்தா திங்கி. அங்கு1,086 பேர் வெள்ளத்தால் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர்.

5 ஆறுகளில் நீர் ஆபத்தான அளவை எட்டியிருக்கிறது. 4 சாலைகள் மூடப்பட்டுள்ளன.
ஆதாரம் : Others

மேலும் செய்திகள் கட்டுரைகள்