பாவி சூறாவளி - சீனாவில் 9 லட்ச பேர் வீடுகளிலிருந்து வெளியேற்றம்
REUTERS/Kim Kyung-Hoon
This audio is generated by an AI tool.
சீனாவில் 900,000க்கும் அதிகமானோர் தங்கள் வீடுகளை விட்டுப் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறிவிட்டனர்.
பாவி சூறாவளி நெருங்குவதால் அந்த அவசர நடவடிக்கை.
கடந்த சில நாளில் தைவான், பிலிப்பீன்ஸ் ஆகியவற்றை பாவி சூறாவளி புரட்டிப்போட்டது.
சீனாவின் கிழக்கேயுள்ள வென்சோவ் (Wenzhou) நகரில் நாளை (ஜூலை 12) சூறாவளி கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அங்கு 10 மில்லியன் பேர் வசிக்கிறார்கள்.
விபரீதத்தைத் தடுக்க மக்கள் முன்னெச்சரிக்கையாக வெளியேற்றப்படுவதாக வென்சோவ் அதிகாரிகள் கூறினர்.
சூறாவளியின் பாதிப்பிலிருந்து தப்பிக்க மக்களும் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர்.