Skip to main content
பசிஃபிக் நெருப்பு வளையம்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

பசிஃபிக் நெருப்பு வளையம் - அப்படியென்றால்?

வாசிப்புநேரம் -
பசிஃபிக் நெருப்பு வளையம் - அப்படியென்றால்?

படம்: Reuters

பிலிப்பீன்ஸின் மிண்டனாவ் தீவை 7.8 ரிக்டர் அளவு நிலநடுக்கம் இன்று உலுக்கியிருக்கிறது.

பிலிப்பீன்ஸ் பசிஃபிக் நெருப்பு வளையத்தில் (Pacific Ring of Fire) இருப்பதால் அங்கு நிலநடுக்கங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம்.

பசிஃபிக் நெருப்பு வளையம் - சில தகவல்கள்

1. பிலிப்பீன்ஸ், இந்தோனேசியா, ஜப்பான், ரஷ்யா, சிலி, அமெரிக்காவின் மேற்குக் கரை ஆகியவை பசிஃபிக் நெருப்பு வளையத்தில் உள்ளன.

2. அது பல கண்டங்களிலுள்ள புவியியல் தகடுகளை (tectonic plates) உள்ளடக்கியிருக்கிறது.

3. நெருப்பு வளையத்திலுள்ள புவியியல் தகடுகள்:
- யூரேஷியத் தகடுகள்
- வட அமெரிக்கத் தகடுகள்
- ஹுவான் டெ ஃபுக்கா (Juan de Fuca) தகடுகள்
- கோக்கோஸ் தகடுகள்
- கரீபியத் தகடுகள்
- நாஸ்கா தகடுகள்
- அண்டார்ட்டிக் தகடுகள்
- இந்தியத் தகடுகள்
- ஆஸ்திரேலியத் தகடுகள்
- பிலிப்பீனோ தகடுகள்

4. தகடுகள் அடிக்கடி நகர்ந்துகொண்டிருக்கும். அப்போது நிலநடுக்கங்களும் எரிமலை வெடிப்புகளும் ஏற்படும்.

5. உலகில் இதுவரை நேர்ந்த நிலநடுக்கங்களில் 90 விழுக்காட்டு நிலநடுக்கங்கள் பசிஃபிக் நெருப்பு வளையத்திலிருக்கும் நாடுகளில் ஏற்பட்டுள்ளன.

6. உலகின் எரிமலைகளில் 75 விழுக்காடு இந்தப் பகுதியில் இருக்கின்றன.
ஆதாரம் : Others

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்