Skip to main content

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

பறவைகளிடமிருந்து உணவுப் பெட்டிகளைப் பாதுகாக்க கண்கள் வரையலாம்!

வாசிப்புநேரம் -
New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

கடற்கரையில் பறவைகளிடமிருந்து உணவுகளைப் பாதுகாக்க ஆய்வாளர்கள் ஒரு விநோதமான வழியைக் கண்டறிந்துள்ளனர். உணவுப் பெட்டிகளில் கண்களை வரைந்தால்போதும்! பிரிட்டனின் (Exeter) எக்ஸ்ட்டர் பல்கலைக்கழகத்தில் ஆய்வு நடத்தப்பட்டது. பிரிட்டனின் பல கடற்கரைகளில் சோதனைகளும் நடத்தப்பட்டன கண்கள் வரையப்பட்டிருந்த உணவுப் பெட்டிகளைப் பறவைகள் கொத்திச்செல்லும் சாத்தியம் குறைவு என்று கண்டுபிடிக்கப்பட்டது. அத்தகைய சம்பவங்கள் சுமார் 50% குறைந்ததாய் ஆய்வு காட்டியது. கண்காணிக்கப்படும் உணர்வை ஏற்படுத்தினால் பல அசம்பாவிதங்களைத் தடுக்கலாம். வயல்களில் அந்த உத்தியே பறவைகளிடமிருந்து பயிர்களைக் காக்க உதவுகிறது. கண்காணிக்கப்படுகிறோம் என்ற அச்சத்தை ஏற்படுத்துவது திருட்டு, முறைகேடு போன்றவற்றைத் தடுக்க உதவுகிறது. எனினும் எதைக் கண்டும் மிரளாத பறவைகளும் உண்டு. ஓவிய விழிகளைக் கண்டு அஞ்சாத பறவைகளைக் கூச்சலிட்டு விரட்டலாம் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
 

ஆதாரம் : Others

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்