Skip to main content
பக்கத்தான் ஹராப்பானின் மூன்றாவது தொடர் தோல்வி: எங்கே தவறியது?
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம் exclusive

பக்கத்தான் ஹராப்பானின் மூன்றாவது தொடர் தோல்வி: எங்கே தவறியது?

வாசிப்புநேரம் -
New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

மலேசியாவின் நெகிரி செம்பிலான் (Negeri Sembilan) மாநிலச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள், ஒரு மாநிலத்தின் ஆட்சி யாரிடம் செல்லும் என்பதை மட்டும் தீர்மானிக்கவில்லை;

மலேசிய அரசியலில் வாக்காளர்களின் மனநிலை எந்தத் திசையை நோக்கி நகர்கிறது என்பதையும் வெளிச்சமிட்டுக் காட்டியுள்ளன என்கிறார் அரசியல் கவனிப்பாளரும் வழக்கறிஞருமான ரேவதி.

இந்தத் தேர்தல் எதிர்கால தேசிய அரசியலுக்கான முக்கிய அரசியல் சமிக்ஞையாகக் கருதப்படுகிறது.

36 சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்ட நெகிரி செம்பிலானில், தேசிய முன்னணி 18 இடங்களை வென்று மிகப்பெரிய அரசியல் சக்தியாக உருவெடுத்துள்ளது.

பக்கத்தான் ஹராப்பான் (Pakatan Harapan) 11 இடங்களையும், பெரிக்கத்தான் நேசனலும் (Perikatan Nasional) 7 இடங்களையும் கைப்பற்றின.

8,59,760 பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களில் 6,46,084 பேர் வாக்களித்துள்ளனர்.

அதாவது 72.64 விழுக்காடு வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது.

இந்த உயர்ந்த வாக்குப்பதிவு, இந்தத் தேர்தலை மக்கள் சாதாரண மாநிலத் தேர்தலாக அல்லாமல், முக்கிய அரசியல் போட்டியாகக் கருதியதைக் காட்டுகிறது

தேசிய முன்னணி மீண்டும் எழுச்சியில்

ஜொகூர் மாநிலத் தேர்தலில் 56 தொகுதிகளில் 48 இடங்களை கைப்பற்றிய தேசிய முன்னணி, தற்போது நெகிரி செம்பிலானிலும் வெற்றிக் கொடியை நாட்டியுள்ளது.

தொடர்ச்சியாக இரண்டு மாநிலங்களில் கிடைத்த இந்த வெற்றி, அம்னோ தலைமையிலான தேசிய முன்னணி தனது பாரம்பரிய வாக்கு வங்கியை மீண்டும் ஒருங்கிணைத்து வருவதை உணர்த்துகிறது.

அன்வார் இப்ராஹிம் தலைமையிலான பக்கத்தான் ஹராப்பான் கூட்டணி, சாபா, ஜொகூர், நெகிரி செம்பிலான் ஆகியவற்றில் நடந்த மூன்று தேர்தல்களிலும் தொடர்ச்சியான பின்னடைவைச் சந்தித்துள்ளது.

பொருளாதார வளர்ச்சி... ஆனால் மக்கள் அதை உணர்கிறார்களா?

கடந்த இரண்டு ஆண்டுகளில் மலேசியா வெளிநாட்டு நேரடி முதலீடுகளை ஈர்ப்பதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டுள்ளது.

உலகளாவிய தொழில்நுட்ப நிறுவனங்களின் முதலீடுகள், தரவு மையங்கள், செயற்கை நுண்ணறிவுத் திட்டங்கள், பகுதி மின்கடத்தித் துறையின் விரிவாக்கம் போன்றவை நாட்டின் பொருளாதாரத்திற்கு நம்பிக்கையூட்டும் அறிகுறிகளாகக் கருதப்படுகின்றன.

ஆனால், இந்த வளர்ச்சியின் பலன் மக்களின் அன்றாட வாழ்க்கையில் உணரப்படுகிறதா?

இன்றும் குடும்பச் செலவுகள் அதிகரித்துக்கொண்டே இருக்கின்றன.

உணவுப் பொருட்களின் விலை உயர்வு, சம்பள வளர்ச்சியின் மந்தநிலை, வாழ்க்கைச் செலவு, வேலைவாய்ப்பு குறித்த அச்சம் போன்றவை மக்களின் முக்கிய கவலைகளாகவே உள்ளன என்றார் திருவாட்டி ரேவதி.

அதனால், பொருளாதாரக் குறியீடுகள் உயர்ந்தாலும், வாழ்க்கைத் தரம் உயர்ந்ததாக மக்கள் உணரவில்லை என்ற மனநிலை இந்தத் தேர்தல் முடிவுகள் பிரதிபலித்துள்ளன.

பொருளாதார எண்கள் மட்டும் போதாது

பக்கத்தான் ஹராப்பானுக்கு இது வெறும் இன்னொரு தேர்தல் தோல்வி அல்ல.

இது தொடர்ச்சியாக ஒலிக்கும் மூன்றாவது எச்சரிக்கை மணி என்றார் திருவாட்டி ரேவதி.

இனி பொருளாதார வளர்ச்சியைப் பற்றி பேசுவதோடு மட்டுமல்லாமல், அந்த வளர்ச்சியின் பலனை மக்கள் தங்கள் அன்றாட வாழ்க்கையில் உணரும் வகையில் மாற்ற முடிகிறதா என்பதே, பக்கத்தான் ஹராப்பானின் எதிர்கால அரசியல் பயணத்தை தீர்மானிக்கும் மிக முக்கியமான கேள்வியாக இருக்கும்.
ஆதாரம் : Mediacorp Seithi

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்