Skip to main content
மருத்துவ அலட்சியம்: HIV பிடியில் 331 பாகிஸ்தான் குழந்தைகள்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

மருத்துவ அலட்சியம்: HIV பிடியில் 331 பாகிஸ்தான் குழந்தைகள்

வாசிப்புநேரம் -
மருத்துவ அலட்சியம்: HIV பிடியில் 331 பாகிஸ்தான் குழந்தைகள்

படம்: Envato Elements

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

பாகிஸ்தானில் பல குழந்தைகளுக்கு HIV கிருமி தொற்றியிருப்பது தெரியவந்துள்ளது.

அரசு மருத்துவமனையில் ஊசிகள் முறையாகப் பயன்படுத்தப்படவில்லை என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

BBC செய்தித் தளத்தின் ரகசிய கேமரா பதிவு மூலம் அது தெரியவந்தது.

THQ Taunsa மருத்துவமனையில் 32 மணி நேரம் பதிவு இடம்பெற்றது.

அடிப்படை சுகாதாரத் தரங்கள் தொடர்ந்து மீறப்படுவதை பதிவு காட்டியது.

💉 சமூகப் பராமரிப்பு ஊழியர்கள் ஒரே ஊசியை பல நோயாளிகளுக்கு பயன்படுத்தினர்.

💉 Multi-dose குப்பிகளிலிருந்து மருந்தை எடுத்து வெவ்வேறு குழந்தைகளுக்குச் செலுத்தினர்.

அது பரவலின் அபாயத்தைக் கணிசமாக அதிகரித்தது என்று BBC அறிக்கை தெரிவித்தது.

நவம்பர் 2024 முதல் அக்டோபர் 2025 வரை குறைந்தபட்சம் 331 குழந்தைகள் HIV கிருமியால் பாதிக்கப்பட்டனர்.

பரிசோதிக்கப்பட்ட 97 குடும்பங்களில், நான்கு தாய்மார்களுக்கு மட்டுமே HIV கிருமித்தொற்று கண்டறியப்பட்டது.

அதனால் பெரும்பாலான கிருமித்தொற்று தாயிடமிருந்து குழந்தைக்குப் பரவியிருக்க வாய்ப்பில்லை என தெரியவந்தது.

2024 இறுதியில் HIV பரவல் முதன்முதலில் கவனத்தை ஈர்த்தது.

உள்ளூர் மருத்துவர் ஒருவர் அது பற்றி விவரமளித்தார்.

தனது மருந்தகத்திற்கு வரும் குழந்தைகளிடையே HIV சம்பவங்கள் அளவுக்கு அதிகமாக அதிகரிப்பதைக் கவனித்தார்.

பாதிக்கப்பட்ட சுமார் 70 குழந்தைகள் அதற்கு முன் THQ Taunsa மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதாக அவர் தெரிவித்தார்.

ஆதாரம் : Others/BBC

மேலும் செய்திகள் கட்டுரைகள்