பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் உடனடி சண்டை நிறுத்தம்
வாசிப்புநேரம் -
(படம்: Syed Basit / AFP)
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
பாகிஸ்தானும் ஆப்கானிஸ்தானும் உடனடி சண்டை நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டுள்ளன.
கத்தாரின் வெளியுறவு அமைச்சு அந்தத் தகவலை தெரிவித்தது.
இரு நாடுகளுக்கும் இடையே அமைதியும் நிலைத்தன்மையும் நீடிப்பதற்கான வழிமுறைகளை வகுக்க இருதரப்பும் ஒப்புக்கொண்டதாக அது கூறியது.
ஏற்கனவே நடப்பிலிருந்த 48 மணி நேர சண்டை நிறுத்தத்தைப் பாகிஸ்தான் மீறியதாக ஆப்கானிஸ்தான் குறைகூறியது.
பாகிஸ்தான் நடத்திய ஆகாயத் தாக்குதலில் இரு பிள்ளைகள் உட்பட 10 பேர் மாண்டனர்.
இம்மாதம் (அக்டோபர்) 11ஆம் தேதி இரு நாடுகளுக்கும் இடையே எல்லைப் பூசல் தொடங்கியது.
தலிபானின் வெளியுறவு அமைச்சர் இந்தியா சென்றிருந்தபோது ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் தாக்குதல் நடத்தப்பட்டது.
பதிலுக்குப் பாகிஸ்தானின் தெற்கு எல்லைப் பகுதியில் தலிபான் தாக்குதல் நடத்தியது.
இருதரப்பிலும் பலர் மாண்டதாக AFP செய்தி நிறுவனம் கூறியது.
ஆப்கானிஸ்தான் பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆதரவு அளிப்பதாகப் பாகிஸ்தான் குற்றஞ்சாட்டியது.
ஆப்கானிஸ்தான் அதை மறுத்துள்ளது.

ஆதாரம் : AFP