Skip to main content
மீண்டும் தலைதூக்கியிருக்கும் ஆப்கான்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

மீண்டும் தலைதூக்கியிருக்கும் ஆப்கான்- பாகிஸ்தான் சண்டை

வாசிப்புநேரம் -

ஆப்கானிஸ்தான் அதன் தலைநகர் காபூல் உள்ளிட்ட இடங்களில் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியிருப்பதாய் குற்றஞ்சாட்டியிருக்கிறது.

நால்வர் மாண்டனர். 

சிலர் காயமடைந்தனர். 

கிளர்ச்சிக் குழுவைக் குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டதைப் பாகிஸ்தான் அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தினார்.

பெண்களும் பிள்ளைகளும் காயமுற்றதாய்ச் சொல்லப்படுகிறது. 

தலிபான் உச்சத் தலைவரின் இல்லம் இருக்கும் கந்தஹார் மாநிலத்திலும் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது. 

பாகிஸ்தான் எல்லையோரம் உள்ள கிழக்கு பாக்டியா, பாக்டிக்கா பகுதிகளிலும் தாக்குதல் நடத்தப்பட்டது.

கந்தஹார் விமான நிலையம் அருகே உள்ள காம் ஏர் (Kam Air) தனியார் விமானச் சேவை நிறுவனத்தின் எரிபொருள் கிடங்கையும் பாகிஸ்தான் தாக்கியதாய் ஆப்கானிஸ்தானின் தலிபான் அமைப்பு குற்றஞ்சாட்டியது. 
 
காம் ஏர் நிறுவனம் பயணிகள்  விமானங்களுக்கும் ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் விமானங்களுக்கும் எரிபொருள் வழங்குவதாய் தலிபான் சொன்னது.

வன்முறைக்கு உரிய பதிலடி கொடுக்கப்போவதாய் தலிபான் பேச்சாளர் சூளுரைத்தார். 

ஆதாரம் : AGENCIES

மேலும் செய்திகள் கட்டுரைகள்