"பாகிஸ்தானில் 220 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்"
பாகிஸ்தானின் பலுச்சிஸ்தான் (Balochistan) வட்டாரத்தில் மேற்கொள்ளப்பட்ட ஒருவாரச் சோதனை நடவடிக்கையில் சுமார் 220 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
நாட்டின் ஆகப்பெரிய, ஆக ஏழ்மையான மாநிலம் பலுச்சிஸ்தான்.
அங்கு நடத்தப்படும் பிரிவினைவாதத் தாக்குதல்களுக்கு இந்தியாவே காரணம் என்று பாகிஸ்தான் குறைகூறுகிறது.
அந்தக் குற்றச்சாட்டுகள் அடிப்படையற்றவை என்று புதுடில்லி நிராகரித்தது.
பள்ளிகள், வங்கிகள், சந்தைகள், பாதுகாப்புக் கட்டமைப்புகள் ஆகியவற்றைக் குறிவைத்து பலுச்சிஸ்தானில் செயல்படும் பலூச் விடுதலைப்படை மிகப்பெரிய தாக்குதல்களை நடத்திவருகிறது.
ஆனால் அமைதியாக இயங்கும் பயங்கரவாதிகளைக் கண்டுபிடித்துள்ளதாகவும்,
அமைப்பின் ஆயுதங்களைக் கைப்பற்றியுள்ளதாகவும் பாகிஸ்தான் ராணுவம் கூறுகிறது.
தாக்குதல்களில் குறைந்தது 22 பாதுகாப்பு அதிகாரிகளும் 36 பொதுமக்களும் மாண்டனர் என்று பாகிஸ்தான் சொல்கிறது.