கானின் ஆதரவாளர்களுக்கு ஆயுள் தண்டனை விதித்தது பாகிஸ்தான்
வாசிப்புநேரம் -
பாகிஸ்தான் நீதிமன்றம் 8 செய்தியாளர்களுக்கும் சமூக ஊடகங்களில் கருத்துத் தெரிவிப்போருக்கும் ஆயுள் தண்டனை விதித்துள்ளது.
அந்த 8 பேரும் நீதிமன்றத்திற்கு வரவில்லை.
முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு (Imran Khan) ஆதரவாக இணையத்தில் அவர்கள் பயங்கரவாதக் குற்றங்களில் ஈடுபட்டதாகத் தீர்ப்பளிக்கப்பட்டது.
கான் தற்போது சிறையில் இருக்கிறார்.
2023ஆம் ஆண்டு மே மாதம் வெடித்த ஆர்ப்பாட்டங்களுக்குப் பிறகு அந்த 8 பேர் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
கான் கைது செய்யப்பட்ட பிறகு அவரது ஆதரவாளர்கள் ராணுவ அமைப்புகளைத் தாக்கியதாகக் குற்றஞ்சாட்டப்பட்டது.
அப்போதிலிருந்து கானின் கட்சியைச் சேர்ந்தவர்களையும், அவருக்கு ஆதரவு வழங்குவோரையும் அரசாங்கமும் ராணுவமும் குறிவைத்திருக்கின்றன.
ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட அந்த 8 பேரும் வெளியிட்ட இணைய உள்ளடக்கங்கள் சமூகத்தில் பயத்தையும் குழப்பத்தையும் ஏற்படுத்தியதாகக் கருதப்படுகிறது.
எனவே பாகிஸ்தான் சட்டத்தின் கீழ் அது பயங்கரவாதத்தைத் தூண்டுவதுபோல் இருப்பதாக நீதிமன்றம் கூறியது.
குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்ட பெரும்பாலானோர் பாகிஸ்தானில் இல்லை என்று கூறப்பட்டது.

ஆதாரம் : Reuters