பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு 14 ஆண்டுச் சிறை
வாசிப்புநேரம் -

(கோப்புப் படம்: AFP/Arif Ali)
பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு நில ஊழல் வழக்கில் 14 ஆண்டுச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இம்ரான் கான் வைக்கப்பட்டுள்ள ராவல்பிண்டி சிறையில் அந்தத் தீர்ப்பு அறிவிக்கப்பட்டது.
2023ஆம் ஆண்டு ஆகஸ்டிலிருந்து அவர் சிறையில் வைக்கப்பட்டுள்ளார்.
முன்னைய ஊழல் வழக்குகளில் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த இம்ரான் கானின் மனைவிக்கும் ஏழாண்டுச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
அரசியல் நோக்கத்தோடு அவர்கள் கைதுசெய்யப்பட்டதாக இம்ரான் கானின் வழக்கறிஞர் குழு கூறியது.
இம்ரான் கானுக்கு வயது 72.

ஆதாரம் : AFP