எரிவாயுக் கலன் வெடிப்பு - புதுமணத் தம்பதி உட்பட 8 பேர் மரணம்
This audio is generated by an AI tool.
திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்குப் பிறகு நேர்ந்த எரிவாயுக் கலன் வெடிப்பில் புதுமணத் தம்பதி உட்பட 8 பேர் மாண்டனர்.
இன்று பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள ஒரு வீட்டில் சம்பவம் நடந்தது.
கொண்டாட்டத்தில் கலந்துகொண்ட விருந்தினர்கள் வீட்டிலேயே தங்கி அங்கு உறங்கினர்.
அதிகாலையில் எரிவாயுக் கலன் வெடித்ததில் அருகில் இருந்த சில வீடுகளும் சேதமடைந்தன.
காயமடைந்த ஏழு பேர் மருத்துவச் சிகிச்சை பெறுகின்றனர்.
காவல்துறை விசாரணை தொடர்கிறது.
பாகிஸ்தானியப் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் (Shehbaz Sharif) இரங்கல் தெரிவித்தார்.
பாகிஸ்தானில் பலரும் திரவ எரிவாயுக் கலன்களைப் பயன்படுத்துகின்றனர்.
அதனால் வாயு கசிந்து கோர விபத்துகள் நடப்பதாகச் சொல்லப்படுகிறது.