Skip to main content
போரினால் பெட்ரோல் படும்பாடு
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

போரினால் பெட்ரோல் படும்பாடு

வாசிப்புநேரம் -
போரினால் பெட்ரோல் படும்பாடு

Arif ALI / AFP

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

பாகிஸ்தான் மளமளவென உயர்ந்த எரிபொருள் விலையைக் கட்டுப்படுத்தியுள்ளது.

பெட்ரோல் விலை 80 ரூபாய் குறைக்கப்படுவதாக பாகிஸ்தான் அறிவித்தது. 

ஏற்கனவே 40 விழுக்காட்டை உயர்த்தியதால் மக்கள் பெரும் அவதியில் சிக்கினர். 

இப்போது அதைச் சமாளிக்க அரசாங்கம் முனைகிறது. 

பெட்ரோல் லிட்டருக்கு 378 ரூபாய் விற்கப்படும் என்று பிரதமர் ஷெபாஸ் ஷரிஃப் (Shehbaz Sharif) சொல்கிறார். 

இன்றிலிருந்து ஒரு மாதத்திற்கு அந்த விலையில் பெட்ரோல் விற்கப்படும் என்று அவர் சொன்னார். 

நேற்று (3 ஏப்ரல்) பாகிஸ்தானில் எரிபொருள் விலை அதிக அளவு உயர்ந்தது. 

பெட்ரோல் விலை 40 விழுக்காடு கூடியது.

டீசல் விலை கிட்டத்தட்ட 55 விழுக்காடு அதிகரித்தது.

பாகிஸ்தான் மட்டுமில்லாமல் ஆசியாவில் பல நாடுகள் எரிசக்திப் பற்றாக்குறை, விலையேற்றம் ஆகியவற்றைச் சமாளிக்க திட்டங்களைச் செயல்படுத்துகின்றன.

பங்களாதேஷில் எரிசக்தியை மிச்சப்படுத்த அலுவலக நேரமும் வர்த்தக நேரமும்  குறைக்கப்பட்டுள்ளது.

இந்தோனேசியாவில் அரசாங்க ஊழியர்கள் வெள்ளிக்கிழமைகளில் வீட்டிலிருந்து வேலை செய்யும் நடைமுறை நடப்புக்கு வந்துள்ளது.

ஆதாரம் : AGENCIES

மேலும் செய்திகள் கட்டுரைகள்