கராச்சி தீ - 67 பேர் மரணம்
This audio is generated by an AI tool.
பாகிஸ்தானின் கராச்சி நகரில் உள்ள கடைத்தொகுதியில் நேர்ந்த தீச்சம்பவத்தில் மாண்டோர் எண்ணிக்கை 67க்கு அதிகரித்துள்ளது.
மீட்புப் பணிகள் மெதுவாக நடப்பதாய் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் குறைகூறியிருக்கின்றன.
காணாமல்போன உறவினர்களைக் கண்டுபிடிக்கும் நோக்கில் 50க்கும் அதிகமானோர் தங்களின் மரபணு மாதிரிகளைச் சோதனைக்காக அனுப்பியிருக்கின்றனர்.
மாண்டோரின் குடும்பங்கள் ஒவ்வொன்றுக்கும் சுமார் 36,000 டாலர் கொடுக்கவிருப்பதாய் மாநில அரசாங்கம் அறிவித்துள்ளது.
கடைத்தொகுதியைச் சேர்ந்த 1200 கடைக்காரர்களுக்கும் இழப்பீடு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
அந்த 3 மாடிக் கடைத்தொகுதியில் சென்ற சனிக்கிழமை (17 ஜனவரி) தீப்பற்றியது.
எதனால் தீ மூண்டது என்பது தெரியவில்லை.