கராச்சி தீ - மரண எண்ணிக்கை 55
This audio is generated by an AI tool.
பாகிஸ்தானின் கராச்சி நகரில் கடைத்தொகுதியில் ஏற்பட்ட தீயில் மாண்டோர் எண்ணிக்கை 55ஆக உயர்ந்துள்ளது.
இன்னும் பலரைக் காணவில்லை.
சென்ற சனிக்கிழமை (17 ஜனவரி) 3 மாடிகள் கொண்ட குல் பிளாஸா கடைத்தொகுதியில் தீ மூண்டது.
மீட்புப் பணியாளர்கள் எஞ்சியோரின் உடல்களைத் தேடி வருகின்றனர்.
அந்தப் பணி மிகவும் மெதுவாக நடைபெறுவதாகக் காணாமல்போனவர்களின் உறவினர்கள் குறைகூறினர்.
50க்கும் அதிகமான குடும்பங்களிடமிருந்து மரபணு மாதிரி பெறப்பட்டுள்ளது.
மரபணு மாதிரிகள் பொருந்தியதும் உடல்கள் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்படும் என்று சுகாதார அதிகாரி ஒருவர் கூறினார்.
கடைத்தொகுதியில் எதனால் தீ மூண்டது என்பது தெரியவில்லை.
அரசாங்க அமைப்பு விசாரணையைத் தொடங்கியுள்ளது.
மாண்டோரின் குடும்பத்தாருக்கு 36,000 டாலர் இழப்பீடாக வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.