பாகிஸ்தான் கடைத்தொகுதியில் தீ - 65 பேரைக் காணவில்லை
This audio is generated by an AI tool.
பாகிஸ்தானின் கராச்சி நகரில் உள்ள குல் பிளாஸா (Gul Plaza) கடைத்தொகுதியில் ஏற்பட்ட தீயில் 6 பேர் மாண்டனர்.
65 பேரைத் தேடும் பணி தொடர்கிறது.
தீயை அணைக்க தீயணைப்பாளர்கள் 24 மணிநேரத்துக்கும் மேலாகப் போராடினர்.
மூன்று மாடிகளைக் கொண்ட அந்தக் கடைத்தொகுதிக் கட்டடத்தில் 1,200க்கும் மேற்பட்ட கடைகள் செயல்பட்டன.
ஆடை, கம்பளம், அழகுசாதனப் பொருள்கள், மின்சாரச் சாதனங்கள் எனப் பல்வேறு பொருள்கள் அங்கு விற்கப்பட்டன.
தீயில் கருகிய கட்டத்தின் பின்-பகுதி இடிந்து விழுந்தது.
கட்டடத்துக்குள் காற்றோட்டம் இல்லாததால் புகை விரைவாகப் பரவியதாகக் கூறப்படுகிறது.
7 நுழைவாயில்களில் 2 மட்டுமே திறந்திருந்ததாக அரசாங்கப் பேச்சாளர் கூறினார்.
தீச்சம்பவத்தால் 7 மில்லியன் டாலருக்கு மேல் இழப்பு ஏற்பட்டிருப்பதாகக் கணிக்கப்பட்டுள்ளது.