Skip to main content
வேகமாகக் கீழிறங்கி மாயமான விமானம்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

வேகமாகக் கீழிறங்கி மாயமான விமானம்

வாசிப்புநேரம் -
New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

பாகிஸ்தானின் கராச்சிக்குச் சென்றுகொண்டிருந்த சரக்கு விமானத்தைக் காணவில்லை.

அதில் ஐவர் இருந்தனர்.

அரபுக் கடலில் விமானம் விழுந்ததாகப் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷரிஃப் (Shehbaz Sharif) கூறினார்.

ஐக்கிய அரபுச் சிற்றரசுகளின் ஷார்ஜாவிலிருந்து (Sharjah) பாகிஸ்தானின் காராச்சிக்கு அந்த விமானம் சென்றுகொண்டிருந்தது.

விமானத்தின் வழிகாட்டும் அமைப்பில் கோளாறு ஏற்பட்டதாக அதிகாரிகள் கூறினர்.

நேற்று இரவு அந்த விமானத்துடன் தொடர்பு துண்டிக்கப்பட்டது.

பாகிஸ்தான் நேரப்படி இரவு 9.20 மணியளவில் விமானம் வேகமாகக் கீழிறங்கியது ரேடாரில் தெரிந்தது.

விமானம் ஒரு நிமிடத்திற்குள் சுமார் ஐயாயிரம் அடி கீழே விழுந்ததாகத் தெரிகிறது.

K2 Airways எனும் தனியார் நிறுவனம் அந்த Boeing ரக விமானத்தை இயக்கியது.

விமானத்தைத் தேடும் பணி தொடர்கிறது.

 
ஆதாரம் : AFP

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்