Skip to main content

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

பிரிவினைவாதிகளை ஒடுக்கப் பாகிஸ்தான் பாதுகாப்புப் படை தீவிர முயற்சி

வாசிப்புநேரம் -
பிரிவினைவாதிகளை ஒடுக்கப் பாகிஸ்தான் பாதுகாப்புப் படை தீவிர முயற்சி
படம்: Reuters
பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினர் தென்மேற்கே உள்ள நகரில் பிரிவினைவாதிகளை ஒடுக்கத் தீவிரமாகப் போராடுகின்றனர்.

ஆளில்லா வானூர்திகள், ஹெலிகாப்டர்கள் முதலியவற்றையும் அவர்கள் பயன்படுத்தினர்.

மூன்று நாளாய்த் தொடரும் சண்டையில் மாண்டோர் எண்ணிக்கை 58க்கு உயர்ந்துள்ளது.

சனிக்கிழமை பலூச் விடுதலை ராணுவம் பலுச்சிஸ்தான் பகுதியில் தாக்குதல் நடத்தியது.

பள்ளிகள், வங்கிகள், சந்தைகள், பாதுகாப்புத் தளங்கள் ஆகியவற்றில் புகுந்து 22 பாதுகாப்பு அதிகாரிகளையும் 36 பொதுமக்களையும் கொன்றது.

அதிகாலை 4 மணியளவில் தாக்குதல் ஆரம்பித்ததாகப் பாதுகாப்பு அதிகாரிகள் கூறினர்.

தாக்குதலுக்கு இந்தியாவே காரணம் என்று பாகிஸ்தான் குற்றஞ்சாட்டியது.

இந்திய வெளியுறவு அமைச்சு அதை மறுத்தது.

பலுச்சிஸ்தான் மக்களின் நீண்டகாலக் கோரிக்கைகளைப் பாகிஸ்தான் நிறைவேற்ற வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தியது.
ஆதாரம் : Reuters

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்