Skip to main content
"பாகிஸ்தானுக்கு வரும் தண்ணீரை இந்தியா தடுத்தால்..."
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

"பாகிஸ்தானுக்கு வரும் தண்ணீரை இந்தியா தடுத்தால்..."

வாசிப்புநேரம் -
"பாகிஸ்தானுக்கு வரும் தண்ணீரை இந்தியா தடுத்தால்..."

(கோப்புப் படம்: REUTERS/Maxim Shemetov/Pool)

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

பாகிஸ்தானியப் பிரதமர் ஷெபாஸ் ஷரிப் (Shehbaz Sharif) சுதந்திர தின உரையில் இந்தியாவைச் சாடியிருக்கிறார்.

பாகிஸ்தானுக்கு வரும் தண்ணீரை இந்தியா தடுத்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் எச்சரித்தார்.

இந்தியக் கட்டுப்பாட்டில் இருக்கும் காஷ்மீரின் பெஹல்காம் பகுதியில் சென்ற ஆண்டு நடத்தப்பட்ட தாக்குதலில் 26 பொது மக்கள் மாண்டதைத் தொடர்ந்து சிந்து நதிநீர்ப் பங்கீட்டுத் திட்டத்தை இந்தியா தற்காலிகமாக ரத்து செய்தது.

அந்தத் தாக்குதலுக்குப் பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகளே காரணம் என்று இந்தியா கூறுகிறது. பாகிஸ்தான் மறுக்கிறது.

இருநாடுகளும் அதன் தொடர்பில் 4 நாள் போரிட்டன.

அந்தப் போரைத் தடுத்து மில்லியன் கணக்கான உயிர்களைக் காத்ததற்காக அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்புக்குத் (Donald Trump) திரு ஷரிப் நன்றி சொன்னார்.

இந்தியாவும் பாகிஸ்தானும் பேசி போரை நிறுத்தியதாகவும் அமெரிக்காவுக்கு அதில் சம்பந்தமில்லை என்றும் இந்தியா சொல்கிறது.
ஆதாரம் : Others

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்