Skip to main content
பாகிஸ்தான் ரயில் தாக்குதல்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

பாகிஸ்தான் ரயில் தாக்குதல் - "அமைதி நிலைகுலையவில்லை"

வாசிப்புநேரம் -
பாகிஸ்தான் ரயில் தாக்குதல் - "அமைதி நிலைகுலையவில்லை"

படம்: AFP

பாகிஸ்தான் ரயில் தாக்குதலில் உயிருடற்சேதம் ஏற்பட்டிருந்தாலும் நாட்டின் அமைதி நிலைகுலையவில்லை என்று அந்நாட்டுப் பிரதமர் ஷெபாஸ் ஷரிஃப் (Shehbaz Sharif) கூறியிருக்கிறார்.

பலூக் விடுதலைப் படை நடத்திய தாக்குதலில் 21 பொதுமக்களும் 4 பாதுகாப்புத் துரப்பினரும் மாண்டதாகப் பாகிஸ்தான் ராணுவம் கூறுகிறது.

குவெட்டா (Quetta) நகரிலிருந்து பெஷாவார் (Peshawar) நகருக்குச் சென்று கொண்டிருந்த ஜபார் எஸ்பிரஸ் ரயிலில் சுமார் 440 பேர் பயணம் செய்துகொண்டிருந்தனர்.

அப்போது அது பலூக் விடுதலைப் படையால் தாக்கப்பட்டது.

பாதுகாப்பு அதிகாரிகள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோர் பிணைபிடிக்கப்பட்டனர்.

ரயிலில் இருந்த ராணுவத்தினர் குறிவைக்கப்பட்டதாக உயிர்பிழைத்தவர்கள் தெரிவித்தனர்.
ஆதாரம் : Others

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்