போர் உருவாகும் அபாயம் ஏற்பட இந்தியாவே காரணம் - பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சு
வாசிப்புநேரம் -
(படம்: Sajjad QAYYUM / AFP)
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
இந்தியா, பாகிஸ்தான் இரு நாடுகளுக்கு இடையே போர் உருவாகும் அபாயம் ஏற்பட இந்தியாவே காரணம் என்று பாகிஸ்தானின் வெளியுறவு அமைச்சு குற்றஞ்சாட்டியுள்ளது.
இந்தியாவின் நடத்தை உலக நாடுகளுக்குப் பெரும் அக்கறையை ஏற்படுத்தக்கூடும் என்று அது கூறியது.
பாகிஸ்தானின் கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீர்ப் பகுதியில் நேற்றிரவு இந்தியா நடத்திய தாக்குதலில் 2 வயதுச் சிறுமி உட்படப் பொதுமக்கள் ஐவர் மாண்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
12 பேர் காயமுற்றனர்.
அதிக ராணுவ நடமாட்டம் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே இருக்கும் பகுதிகளில் தாக்குதல் நடைபெற்றது.
ஏப்ரல் 22ஆம் தேதி இந்தியாவின் கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீர்ப் பகுதியில் நடந்த தாக்குதலில் 26 பேர் மாண்டதை அடுத்து இரு நாடுகளுக்கு இடையே தொடர் சண்டை நடைபெற்று வருகிறது.

ஆதாரம் : Others