Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

உடற்குறையுள்ளோருக்கான ஒலிம்பிக் போட்டிகளில் 2 மில்லியன் அனுமதிச்சீட்டுகள் விற்பனை

வாசிப்புநேரம் -

பாரிஸில் தொடங்கியிருக்கும் உடற்குறையுள்ளோருக்கான ஒலிம்பிக் போட்டிகளுக்காக இதுவரை இரண்டு மில்லியன் அனுமதிச்சீட்டுகளுக்கும் மேல் விற்றுள்ளன. 

ஒரு மில்லியன் அனுமதிச் சீட்டுகள் கடந்த ஒரு மாதத்தில் விற்றதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர். 

ஒலிம்பிக் இன்று (29 ஆகஸ்ட்) தொடங்கி அடுத்த மாதம் 8ஆம் தேதி வரை நடைபெறும்.  

கடைசிப் போட்டி நடந்து முடியும்வரை அனுமதிச் சீட்டுகள் தொடர்ந்து விற்கப்படும் என்று ஏற்பாட்டாளர்கள் கூறினர். 

இன்னமும் சுமார் 500,000 அனுமதிச்சீட்டுகள் இருப்பதாக அவர்கள் தெரிவித்தனர். 

அனைத்துச் சீட்டுகளையும் விற்றுமுடித்துவிட முடியும் என்று பாரிஸ் ஏற்பாட்டாளர்கள் நம்புகின்றனர். 

இதுவரை ஆக அதிகமாக 2012ஆம் ஆண்டு லண்டனில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் 97 விழுக்காட்டு நுழைவுச்சீட்டுகள் விற்கப்பட்டன.

அப்போது மொத்தம் 2.7 மில்லியன் நுழைவுச்சீட்டுகள் விற்பனை செய்யப்பட்டன.

ஆதாரம் : Reuters

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்