உடற்குறையுள்ளோருக்கான ஒலிம்பிக் போட்டி உற்சாகத் தொடக்கம்
பாரிஸில் உடற்குறையுள்ளோருக்கான ஒலிம்பிக் போட்டி உற்சாகமாய்த் தொடங்கியுள்ளது.
பிரெஞ்சு அதிபர் இம்மானுவெல் மக்ரோன் (Emmanuel Macron) ) ஒலிம்பிக் போட்டிகளை அதிகாரபூர்வமாகத் தொடங்கிவைத்தார்.
பிரஞ்சுத் தலைநகரில் முதல் முறையாக உடற்குறையுள்ளோருக்கான ஒலிம்பிக் போட்டியின் தொடக்கவிழா, அரங்கத்துக்கு வெளியே நடைபெற்றது.
"விளையாட்டின் வழி ஒன்றுபடுவது சாத்தியம் என்று உலகத் தலைவர்களுக்கு எடுத்துச் சொல்வோம்," என்று ஏற்பாட்டுக் குழுத் தலைவர் ஆண்ட்ரூ பார்சன்ஸ் (Andrew Parsons) கூறினார்.
இனிமையான கோடை இரவில் தொடங்கி இனி 11 நாளுக்குப் போட்டிகள் நடைபெறும்.
184 நாடுகளையும் வட்டாரங்களையும் சேர்ந்த நாலாயிரத்து நானூறு விளையாட்டாளர்கள் பங்கேற்பர்.
சிங்கப்பூரைச் சேர்ந்த பத்துப் போட்டியாளர்கள் இன்று (29 ஆகஸ்ட்) அதிகாலை பாரிஸில் தேசியக் கொடியை ஏந்திச் சென்றனர்.
மொத்தம் 22 விளையாட்டுப் போட்டிகள் நடைபெறும்.
549 தங்கப் பதக்கங்களைக் கைப்பற்ற போட்டி நடக்கும்.