Skip to main content

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

பாரிஸ் உடன்பாட்டின் இலக்கை அடைவது குறித்து இணக்கம் எட்டுவதில் சிரமம்

வாசிப்புநேரம் -
எகிப்தில் நடக்கும் COP27 பருவநிலை மாநாட்டில் 2015 பாரிஸ் உடன்பாட்டின் இலக்கை அடைவதுபற்றி ஒருமித்த முடிவை எட்டுவதில் சிரமம் நீடிக்கிறது.

பாரிஸ் பருவநிலை உடன்பாட்டு இலக்கின் வாசகங்களை அதிகாரபூர்வமாகக் குறிப்பிட உலகத் தலைவர்கள் பலரும் எதிர்ப்புத் தெரிவிப்பதாகப் பருவநிலை மாற்றத்துக்கான அமெரிக்கத் தூதர் ஜான் கெர்ரி (John Kerry) கூறினார்.

உலக அளவில் அதிகரிக்கும் வெப்பநிலையை சராசரி ஒன்றரை டிகிரி செல்சியஸ் வரை குறைக்கவேண்டும் என்கிறது பாரிஸ் பருவநிலை உடன்பாடு.

ஆனால் தற்போது வெப்ப வாயு வெளியேற்றம் முன்னைவிட அதிகரித்துள்ளது.

உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் நிலைமை மோசமடையும்; உலக வெப்பச் சராசரி ஒன்றரை விழுக்காட்டைத் தாண்டினால் மிகக் கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர்.

COP27 மாநாடு தொடங்கியதிலிருந்து "இழப்பு, சேத நிதி"யை ஏற்படுத்த வேண்டும் என்று வளரும் நாடுகள் வலியுறுத்துகின்றன.

பேரிடர்களிலிருந்து மீண்டுவரச் சிரமப்படும் நாடுகளுக்கு அந்த நிதி உதவக்கூடும்.

ஆனால், அமெரிக்கா அத்தகைய நிதியை ஆதரிக்காது; ஏற்கனவே இருக்கக்கூடிய வளங்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று திரு கெர்ரி கூறினார்.

இதற்கிடையே COP 27 மாநாடு நடைபெறும் இடத்துக்கு வெளியே ஆப்பிரிக்க நாடுகள் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளன. படிம எரிபொருள் பயன்பாட்டை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்றும் ஆப்பிரிக்கக் கண்டத்தில் பருவநிலை மாற்றத்தின் தாக்கம் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டும் என்றும் அந்நாடுகள் வலியுறுத்தின.

மேலும் செய்திகள் கட்டுரைகள்