Skip to main content

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

ஒரே இடத்தில் 50 பேர்... அடுக்கு மாடி வீட்டின் தரை இடிந்து விழுந்தது

வாசிப்புநேரம் -
ஒரே இடத்தில் 50 பேர்... அடுக்கு மாடி வீட்டின் தரை இடிந்து விழுந்தது

(படம்: Pixabay)

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

பிரெஞ்சுத் தலைநகர் பாரிஸில் ஓர் அடுக்குமாடி வீட்டின் தரை இடிந்து விழுந்துள்ளது.

ஒருவர் கடுமையாகக் காயமுற்றார்.

இதயத் துடிப்பு நின்றதால் அவருக்கு அவசர உயிர்க்காப்புச் சிகிச்சை அளிக்கப்பட்டது.

பிறகு அவர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார் என்று காவல்துறை தெரிவித்தது.

காயமுற்ற மேலும் 14 பேருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டது.

5ஆவது மாடியிலிருந்த அந்த வீட்டில் நேற்று முன்தினம் (17 ஜனவரி) ஒன்றுகூடல் நிகழச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

சுமார் 50 பேர் கூடியிருந்தனர்.

அப்போது திடீரென வீட்டின் தரை இடிந்து விழுந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

மேலும் சேதம் ஏற்படுவதைத் தவிர்க்க மீட்புக் குழுவினர் 4ஆவது மாடியை வலுப்படுத்தினர்.

கட்டட அமைப்பில் எந்தப் பாதிப்பும் இல்லை என்று காவல்துறை கூறியது.

ஆதாரம் : AFP

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்